வடக்கில் அமைக்கப்பட்டுவரும் விகாரைகள் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரியுள்ளார்.
பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர், கிளிநொச்சி தண்ணீர் தாங்கிக்கு அருகில், விகாரை அமைப்பதற்கான நில அளவைப் பணிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன், ஆனையிறவு முகாமுக்கு பின்புறமாக, பாரிய விகாரை அமைக்கப்பட்டு வருவதாகவும் சிறிதரன் தெரிவித்தார்.
Be First to Comment