கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி சீனா முழுவதும் ஒமிக்ரோன் திரிபின் புதிய XBB வகை கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.
தற்போது வாரத்துக்கு 4 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.
வரும் ஜூன் மாதத்தில் சீனாவில் கொரோனா தொற்று உச்சத்தை அடையும் எனவும் வாரத்துக்கு 6.5 இலட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து பெய்ஜிங் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர் வாங் குவாங்பா தெரிவிக்கையில், சீனாவில் புதிய கொரோனா அலை ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதன் பாதிப்பு மிதமாகவே உள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் நுரையீரல் தொற்று நிபுணர் ஜாங் நான்ஷான் தெரிவிக்கையில், ஒமிக்ரோன் XBB வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ள புதிதாக 2 தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். விரைவில் மேலும் 4 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
எனவே ,சீனாவில் இருந்து ஒமிக்ரோன் XBB வைரஸ் உலக நாடுகளுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சீனாவின் அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் புதிய கொரோனா அலை: 6.5 இலட்சம் பேர் பாதிப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment