Press "Enter" to skip to content

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு நீதிமன்றால் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிப்பு!

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு நீதிமன்றால் 50,000/= தண்டம் விதிப்பு…

யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களினால் மாதாந்தம் உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பன பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 10ம் திகதிய பரிசோதனையிலு கஸ்தூரியார் வீதியில் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனினால் இனங்காணப்பட்டது.

இதனையடுத்து உணவக உரிமையாளரிற்கு எதிராக கடந்த 11ம் திகதி மேலதிக நீதிவான் மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் உணவகத்தினை சுகாதார சீர்கேடுகள் சீர் செய்யப்படும்வரை உணவகத்தினை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டது.

மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு மீண்டும் எடுத்து கொள்ளப்பட்ட போது பொது சுகாதார பரிசோதகரால் உணவக உரிமையாளரிற்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து குற்றச்சாட்டுகளிற்கும் உணவக உரிமையாளரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 50,000/= தண்டம் விதித்தது. அத்துடன் இனங்காணப்பட்ட குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து உணவகத்தினை மீள திறப்பதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *