டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழிநுட்ப அமைச்சுடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
Be First to Comment