யாழ்.மத்திய சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஒருவர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் இரவாகியும் தொடர்ந்து வருகின்றது.
யாழ்.மத்திய சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகிறது.
மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான புஷ்பகுமார என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Be First to Comment