கிளிநொச்சி A9 வீதி திரேசம்மாள் கோவில் அருகில் சற்று முன் வீதிப் பாதுகாப்புத் தூண்களை இ.போ ச பஸ் வண்டி மோதித் தள்ளியது.
இதன்போது பயணிகள் எவருக்கும் பாரிய சேதமில்லை எனினும் பேருந்தின் கதவு மற்றும் மிதிபலகை என்பன சேதமடைந்துள்ளது.
பயணிகள் அவதி
பூநகரிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்தே தற்கெட்டு ஓடி வீதிப் பாதுகாப்புத் தூண்களை மோதியுள்ளது.
இந்நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் அவதிப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் மாற்று பஸ் வண்டி வரவழைக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
எனினும் இந்த விபத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
Be First to Comment