குழந்தை இறந்ததை ஏற்காத தந்தை, குழந்தையின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து எடுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.
ஊனமுற்ற குழந்தையுடன் நுவரெலியா வைத்தியசாலைக்கு வந்த நபர் ஒருவர் குழந்தைக்கு சுகவீனம் இருப்பதாக வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்துவிட்டதாக தந்தையிடம் கூறியதாகவும், குழந்தை இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
அப்போது தந்தை மருத்துவர்களிடம், ‘குழந்தைக்கு இப்படி நோய் எப்பொழுதும் வரும்’ என்று கூறியுள்ளதுடன், குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு வைத்தியசாலையில் இருந்து ஓடியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Be First to Comment