Press "Enter" to skip to content

வட கொரியாவில் கொடூரத்தின் உச்சம்; 2 வயது குழந்தைக்கும் ஆயுள்தண்டனை

வட கொரியாவில், ‘பைபிள்’ வைத்திருந்ததற்காக, 2 வயது குழந்தை உட்பட பல கிறிஸ்துவர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றம் சுமத்தியுள்ளது.

கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, அணு ஆயுத விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

வட கொரியாவில் கொடூரத்தின் உச்சம்; 2 வயது குழந்தைக்கும் ஆயுள்தண்டனை | A 2 Year Old Child Sentenced To Life Imprisonment

70 ஆயிரம் கிறிஸ்துவர்கள் சிறையில்

வட கொரியாவில், பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன், 70 ஆயிரம் கிறிஸ்துவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், 2 வயது ஆண் குழந்தையும் அடங்கும் என கூறப்படுகின்றது.

குழந்தையின் பெற்றோர் பைபிள் வைத்திருந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களோடு, 2 வயது குழந்தைக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவர்கள், தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *