29.05.2023
இளைஞர்கள் குற்றவாளிகள் இல்லை அவர்கள் குற்றவாளிகளாக மாற்றப்படும் நிலையே காணப்படுகின்றது- கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் –
இளைஞர்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை அவர்கள் குற்றவாளிகளாக மாற்றப்படும் நிலையே தற்போது காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் கோடீஸ்வரன் றுஷாங்கன் தெரிவித்தார்.
இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் இளைஞர்கள் போதை பொருள் பாவிப்பது தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றோம். ஆனால் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான வழிகளை தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றோம்.
மாணவர்களின் பாடசாலை கல்விகளுக்கு அப்பால் சமயம் தொடர்பான செயற்பாடுகள், அறநெறி கற்கைகள், விளையாட்டு, கலை சார் கற்கைகளில் அதிகம் ஈடுப்படுத்தவேண்டும்.
பாடசாலை கல்விக்கு பின்னர் அரச தொழில்வாய்ப்பு தொடர்பாகவே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது ஆனால் சிலரிடம் மாவட்டத்தில் காணப்படும் தொழில் பயிற்சிகளை கற்பதற்கான ஆர்வம் குறைந்த நிலையில் காணப்படுகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் தொழிற்சார் கற்கை நெறிகளில் கிராமங்களில் காணப்படும் வேலைகள் அற்ற இளைஞர்,யுவதிகளை இணைக்கும் பணிகளை தூரிதப்படுத்தவேண்டும்.
அதன் மூலம் இளைஞர்களின் திறன்விருத்தியை மேம்படுத்த முடியும்
அது மட்டுமின்றி கிராமமட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களை அதிகபடியாக உள்வாங்கி அவர்களுக்கு தேவையான தொழில்சார் பயிற்சிகளை வழங்கி அவர்களின் திறன்களை விருத்தி செய்து உற்பத்தியாளராக, சிறுதொழில் முயற்சியாளர்களாக மாற்ற முடியுமென்றும் தெரிவித்தார் ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர்.
இவற்றின் மூலம் போதையற்ற சமுகத்தினை உருவாக்குவதுடன் இளவயது திருமணம், தற்கொலை, பாலியல் பிறழ்வு, நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் எனவு அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பூநகரி உதவி பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கமநல திணைக்கள அதிகாரி, விவசாய போதனாசிரியர்கள், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரி, கிராமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
Be First to Comment