வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பகுதிகளில் வெப்ப குறியீடு, மனித உடல் உணரும் வெப்ப அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் நீரிழப்பு போன்ற நிலைமைகள் ஏற்படலாம் எனவும், கடும் வெப்பம் நிலவும்; இடங்களில் வேலை செய்பவர்கள்; போதுமான அளவு நீரை அருந்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Be First to Comment