Press "Enter" to skip to content

கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர் உட்பட 10 பேர் கைது

புதுடில்லி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் உட்பட 10 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இலங்கையர், சென்னையில் வசிப்பவர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், மற்ற 9 பேர் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியுள்ளதால், அவர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அதற்கமைய, அவர்களை பொலிஸாரிடம் அழைத்துச் சென்று தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *