இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்ததாக கூறப்பட்ட இளம் யுவதி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மாத்தளை ரத்தோட்டையில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த 21 வயதுடைய குறித்த யுவதியை தேடி அவரின் குடும்பத்தினர் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம்
இந் நிலையில் நேற்று (30) மாலை வீட்டுக்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி பெற்றோருடன் முரண்பட்டிருந்த நிலையிலேயே வீட்டிலிருந்து காணாமல்போயிருந்தார் எனவும் அதன் காரணமாக அவர் காணாமல்போயிருந்த தகவலைப் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் யுவதி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் யுவதியின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment