நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஆயிஷ் பெரேராவின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளரை கடமைக்கு அழைத்து வருவதற்காக உத்தியோகபூர்வ காரில் பிரதேச செயலாளர் வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சாரதி சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதேச செயலாளரைக் காணாததால், சாரதி உள்ளே நுழைந்த போது, அவரது சடலம் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய, சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment