நெடுந்தீவில் 1400 குடும்பங்களுக்காக 590 இணைப்புக்கள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு குடும்பத்திற்கு 50 லீற்றர் வரை குடிநீரை நீர்வழங்கல் அபிவிருத்தி சபை சேவை நோக்கில் வழங்கி வருகையிலும் மக்கள் தமக்கு பற்றாக்குறை நிலவுவதாக மேலதிகமான நீரை விநியோகிக்குமாறு எதிர்பார்ப்பு கோரிக்கைகளை நெடுந்தீவு மக்கள் முன்வைத்தவண்ணமுள்ளனர்.
யாழில் இன்று இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன் 20 லீற்றர் நீரைப் பெறுவதற்கு மக்கள் 4 மணித்தியாளம் வரை காத்திருந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
தற்பொழுது நெடுந்தீவில் நீர்த்தாங்கியை அண்மித்த பகுதியிலுள்ளோர் அதிகளவான நீரை பெற்றுக்கொள்ளவதால் தூரப் பிரதேசத்திலுள்ள மக்கள் குடிநீரைப் பெறுவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
வேலணையின் சில பிரதேசங்களில் நீர்த்தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் 65 ஏக்கர் பகுதியில் முதலீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் 8 முதலீட்டாளர்களும் இம் முதலீட்டாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கு இவை தொடர்பான உரிய அறிக்கைளை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில் உரிய மேல் மட்டங்களுடன் இவ் விடயம் தொடர்பில் கலந்துரையாடி நீர்ப்பற்றாக்குறைப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாக அபிவிருத்திக் குழு தலைவர் குறிப்பிட்டார்.
Be First to Comment