பொய்யான செய்திகளை பிரசுரித்தது மக்கள் மத்தியில் குழப்பங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த வேண்டுகோள் !!!
இரண்டாயிரம் ஏக்கர் நிலம் வனவள திணைக்களத்தினால் அபகரிப்பு செய்யப்படுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொய்யான செய்தி வெளியாகியிருந்தது அச்செய்தியில் உண்மை இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தெரிவித்தார். அச்செய்தி தொடர்பாக எனக்கு கூறியவர்கள் 200 ஏக்கர்களே குறித்த திணைக்களத்தினால் கையகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக அமைச்சரவையில் கேள்வி எழுப்பினேன் அப்போது ஆதங்கப்பட்ட ஜனாதிபதி அவர்கள் காணிகள் தொடர்பாக 1985ஆம் ஆண்டு காணிகள் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையைக் கருத்தில் கொண்டே காணி தொடர்பான விடயங்கள் அணுகப்பட வேண்டும் என்பதை யாழ்ப்பாணத்தில் வைத்தும் தெரிவித்திருந்தேன் என்றும் கூறியிருந்தார். ஆகவே இவ்வாறான செய்திகள் உண்மைத்தன்மை அற்றவை என்று அமைச்சர் கூறினார்.
Be First to Comment