அரியாலைப் பகுதியில் மட்டுமே சீனர்களுக்கு சொந்தமான கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையம் காணப்படுகின்றது. அதைவிட வேறு எவ்விடத்திலும் சீனர்களுக்கு அட்டை பண்ணைகள் உரிமம் இல்லை. கடலட்டைபண்ணை வழங்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் கடற்தொழிளாளர்களாகவே காணப்படுவதுடன் மிக கணிசமானவளவானோர் கடற்றொழிலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தற்போது யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை பண்ணை பகுதிக்கு அண்மையில் சட்ட விதிமுறைகளை மீறி கடற்தொழில் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இந்நிலையில் அங்கு நேரடியாக களவிஜயம் மேற்கொண்டபின் ஆராய்ந்து அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Be First to Comment