கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் செயற்பட்ட காலத்தில் கௌதாரிமுனை பிரதேசத்தில் பாரிய மணல் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய காலப் பகுதியில் அவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கௌதாரிமுனையில் அமைக்கப்படவுள்ள காற்றாலை திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
Be First to Comment