இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக மணல் கொண்டு செல்வது தடைசெய்யப்படுகின்றது- அமைச்சச்ர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை –
சட்டவிரோத மண் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக இன்று முதல் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் மணல்கள் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக கொண்டுசெல்லல் தடைசெய்யப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் -கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகமாக சட்டவிரோத மண்ணகழ்வு இடம்பெறுவதாக பொது அமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்த குற்றசாட்டு தொடர்பான இன்றைய கூட்டத்தொடரில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன்,அனேகர் வெளிமாவட்டத்தில் வழங்கப்படும் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தியே மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாகவும், ஏற்றிசெல்லப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினாவியதுடன் சம்பந்த பட்ட துறைசார் அமைச்சர், துறைசார் திணைக்கள தலைவர் என்பவர்களுடன் உடனடியாக தொடர்புக்கொண்டு அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன்.
சட்டவவிரோத மண் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக இன்று முதல் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் மணல்கள் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக கொண்டுசெல்லல் தடைசெய்யப்படுவதாகவும் உள்ளூரில் மணல் அகழ்வதற்கான அனுமதிபத்திரம் தற்காலிகமாக நிறுத்துவதற்கும் துறைசார் அதிகாரிகள், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன்,அங்கஜன்,கஜேந்திரன் ஆகியோர் உட்பட துறைசார் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச்செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மாவட்ட செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
Be First to Comment