Press "Enter" to skip to content

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில்

01.06.2023

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்,ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்,கடற்தொழில் நீரியல் வளத் துறை அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகிய இவ் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் –

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன்,அங்கஜன்,கஜேந்திரன் ஆகியோர் உட்பட துறைசார் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச்செயலக அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் தொடர் நடவடிக்கைக்கான விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டவுள்ளதுடன், மேலும் கௌதாரிமுனை காற்றாலை மின் திட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டவுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வு, போதைவஸ்து பயன்பாடு மற்றும் கால்நடை திருட்டு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதுடன்

கமநல அபிவிருத்தி, விவசாய விரிவாக்கம், விவசாய ஆராய்ச்சி, நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, வெளிநாட்டு நிதி மூலமான செயற்திட்டமான காலநிலைக்கு அமைவான நீர்பாசன விவசாயத் திட்டம், விவசாயதுறையினை நவீனமயப்படுத்தும் செயற்திட்டம், வளர்ந்துவரும் பிராந்தியத்தில் கிராமப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டம், ஐ காபட் வீதி என்பவற்றுடன்
துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவை துறை சார்ந்த முன்னேற்றங்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டவுள்ளதுடன்

அவற்றில் சுகாதாரம், கல்வி, உள்ளூராட்சி, நீர்வழங்கல், மின்சாரம்,போக்குவரத்து, சமுர்த்தி,அனர்த்த முகாமைத்துவம், சுற்றுச்சூழல், கூட்டுறவு, விளையாட்டு, கிராம அபிவிருத்தி,சமூக சேவைகள், சிறுவர் பாதுகாப்பு, கண்ணிவெடி அகற்றல், இளைஞர் விவகாரம், வீடமைப்பு, காணி உள்ளிட்ட சேவைத் துறைகள் சார்ந்த முன்னேற்றங்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டவுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *