Press "Enter" to skip to content

தவறி விழுந்த ஜோ பைடன் – அறிவுரை கூறிய ட்ரம்ப்!

அமெரிக்க கொலராடோவில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை கல்லூரிக்கான பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கும் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தவறி விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

80 வயதில் அமெரிக்காவின் மிக வயதான ஜனாதிபதியாக இருக்கும் பைடனுக்கு இந்த சம்பவத்தின் போது காயம் எதுவும் ஏற்படவில்லை.

921 பட்டதாரி பயிலுநர்களுக்கு கைகுலுக்க ஜனாதிபதி சுமார் ஒன்றரை மணி நேரம் நின்று கொண்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் உடனடியாக படையதிகாரிகள் அவருக்கு உதவியதுடன், விருந்தினர்களுக்கான ஆசனத்தில் அமரச்செய்தனர்.
இந்தநிலையில் அன்று மாலை வெள்ளை மாளிகைக்கு திரும்பி வந்தபோது, தாம் மேடைக்கு செல்லும்போது “குறுமணலால் சறுக்கிவிட்டேன்” என்று சிரித்தப்படி தெரிவித்தார்.

இதேவேளை மற்றும் ஒரு நிகழ்வில் பங்கேற்ற 76 வயதான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், சம்பவத்தில் பைடன், காயமடைந்திருக்க மாட்டார் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.

முடியாத போது, கால் விரல்களை பதிக்கும் சந்தர்ப்பத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *