முல்லைத்தீவு #ஆரோக்கியபுரம் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு..
ஒதுக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று…..
திருமுறிகண்டி கோவிலுக்கு அருகில் உள்ள வீதியில் பல கி.மீ தூரம் செல்லவேண்டும்.
இம்மக்கள் 80 கி.மீ தூரம் பயணம் செய்து (மூன்று பேருந்து) துணுக்காய் பிரதேச செயலகத்தில் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டும்,
முதியோர் கொடுப்பனவுகளை மூன்று மாதங்கள் பெற்றுக்கொள்ளாமல், நான்காவது மாதம் சென்று தங்களது ஒருமாத பணத்தை ஆட்டோவிற்கு கொடுத்து எடுத்துவருகின்ற நிலைமை,
சமூர்த்தி கொடுப்பனவுகளுக்கும் 80 கி.மீ தூரம் செல்லவேண்டும்,
🟢 உடனடியாக நடமாடும் சேவை மூலம் அரச கொடுப்பனவுகளை வழங்க பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
🟢 ஆளணி இருந்தும் ஆளுமை இல்லா இக்கிராம பாடசாலையால் பிள்ளைகளை வேறு பாடசாலைக்கு சேர்க்கும் நிலையை மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அங்கிருந்து தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி புதிய அதிபர் இணைப்பிற்கும் உறுதிபெறப்பட்டது,
🟢இங்குள்ள மக்கள் பயிர் செய்யும் ஒருபகுதி காணிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருவதால் ஆவணம் கொடுப்பதில் உள்ள பிரச்சனைக்கும் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மூலம் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
குறிப்பு :
இக்கிராம மக்கள் பலரை அக்காலத்தில் யானைகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள தமிழரசுக் கட்சி தலைவர்களால் மலையகத்திலிருந்து இம்மக்களை காட்டின் எல்லை கிராமங்களில் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இம்மக்களுக்கு அருகில் இருக்கும் கிளிநொச்சியில் பதிவை மேற்கொண்டு ஆவணம் கொடுப்பதற்கு அப்போதைய தமிழரசு தலைவர்கள் தடுத்து விட்டனர்.
இவ்விடங்களை, இக்கிராமத்தில் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற கிளிநொச்சியில் இருக்கும் கிராமசேவகர் தெரிவித்தார். அவரும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு இக்கிராம மக்களின் அவல நிலையை எடுத்துக் கூறினார்.
குலசிங்கம் திலீபன்
மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி.
– கு.திலீபன் எம்.பி ஊடகப்பிரிவு
Be First to Comment