காவல்துறை அதிகாரி ஒருவர், தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில், நேற்று மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதுகுறித்து அறிவித்துள்ளார்.
Be First to Comment