அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ள போதிலும், பொருட்களின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையால், நிறுவனங்கள் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள போதிலும், சந்தையில் பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், பல அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அச்சிடல் மற்றும் எழுது கருவிகளின் விலை குறைக்கப்படவில்லை.
சிறிய அளவிலேயே அவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையிலும் சிறிய அளவிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மொத்த சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும்போது அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்படுகிறது.
இது தொடர்பில் மொத்த விற்பனையாளர்களிடம் வினவும்போது அவர்கள் பொருட்களின் விலையை மாற்ற முடியாது என தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னணியிலேயே தாங்கள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்
Be First to Comment