Press "Enter" to skip to content

மருதங்கேணி காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கஜேந்திரகுமாருக்கு அழைப்பு!

கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறை நிலையத்தில் நாளை முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாளைய தினம் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றபோதும்,தொடர்புகொள்ள முடியவில்லை இதனையடுத்து பிரதிசபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளதாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *