சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகளில் 25 சதவீதமானோரே சமையல் எரிவாயு மூலம் பேக்கரி உற்பத்திகளை மேற்கொள்கின்றனர். இதன்காரணமாக, பேக்கரி உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க எடுக்கமுடியாது. அதேநேரம், சமையல் எரிவாயு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் விலைத்திருத்தங்களை தமது சங்கம் மேற்கொள்விலை என அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கேஸ் விலை குறைந்தாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது – உற்பத்தியாளர்கள்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment