Press "Enter" to skip to content

மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு 110 வருட கடூழிய சிறை

தனது 11 வயது மகளை கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது.

அதோடு 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு 110 வருட கடூழிய சிறை | 110 Years Imprisonment Father Molested Daughter

சிறுமியின் தாய் வெளிநாட்டில்

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தந்தை உட்படுத்தியுள்ளதாக உரகஸ்மஹந்திய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, ​​தனது தந்தை குடித்துவிட்டு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூறியுள்ளார்.

மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு 110 வருட கடூழிய சிறை | 110 Years Imprisonment Father Molested Daughter

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவருக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *