தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து, நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர், இன்று காலை 6.30 மணியளவில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.30 அளவில், காவல்துறையினர் தமது இல்லத்திற்கு வந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
கைது விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், இது தொடர்பில், காவல்துறைமா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் கூறியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
மருந்தங்கேணி காவல்துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய, ஜயபுரம் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்துக்கு சென்று கைது செய்துள்ளனர்.
இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் தான்; சட்டவிரோதமாக பொலிஸாராலும் புலனாய்வாளர்களாலும் நடாத்தப்பட்டமை தொடர்பிலும் தனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் குறித்த பிரேரணை சமர்ப்பிக்க விடாது தடுத்து எப்படியென்றாலும் அவரை அதற்குள் கைது செய்வதற்கு பொலிஸார் அவரை அவரது கொழும்பு இல்லத்தில் தடுத்து வைத்ததுடன் இதற்கு எதிராக சட்டரீதியாக எங்களுடைய எதிர்ப்புக்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Be First to Comment