Press "Enter" to skip to content

தமிழ் காங்கிரஸ் மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை

தமிழ்  காங்கிரஸ் மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை தமிழ் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இருவர் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் இருவரும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எதிர் தரப்பு சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

கடந்த (03) அன்று வடமராட்சி கிழக்கு தளையடி பொதுளையாட்டரங்கிலே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்த போது அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவியபோது அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்கப்பட்ட போது அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிய சம்பவம் தொடர்பிலும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார். என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த (05)அன்று அதிகாலை மருதங்கேணி பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார். அன்றைய தினம் மற்றுமொரு சந்தேக நபரான உதயசிவமும் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இருவரும் நீதிமன்றம் முன்னிலைப் படுத்தப்பட்டனர். குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்தக் கொண்ட நீதவான் இருவரையும் 7ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது. வழக்கு தொடர்பாக சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *