பிபில கல்வி வலயத்திற்குட்பட்ட தேசிய பாடசாலையொன்றில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையின் கணித பாடத்திற்கான விடைகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய ஆசிரியர் மற்றும் மாணவி ஆகியோர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த 06ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இருவரிடமும் தற்போது வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக பிபில வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஜே.சுசில் விஜேதிலக தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் கையடக்க தொலைபேசியை உடம்பில் மறைத்து பரீட்சை நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
குறித்த மாணவி அதே பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியருக்கு வினாத்தாள் கிடைத்ததும் அதனை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
அதற்கான விடையும் வாட்ஸ்அப் மூலமே ஆசிரியர் மாணவிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை பிரதிக் கல்விப் பணிப்பாளரால் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மோசடிக்கு ஆதரவான ஆசிரியரை பிபில கல்வி வலயத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளதுடன் பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment