Press "Enter" to skip to content

முகநூல் பக்கத்தினுடான காதல் வலையில் சிக்கி பணத்தை இழந்த பெண்

கனடாவின் டொரன்டோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரில் வாழ்ந்து வருவதாக கூறிய நபர் ஒருவர் குறித்த பெண்ணிடமிருந்து 95 ஆயிரம் டொலர் பணத்தை மோசடி செய்துள்ளார்.குறித்த பெண்ணை காதலிப்பதாக கூறி, சிங்கப்பூரிலிருந்து கனடா வருவதற்கு பணம் இல்லை என இந்த பெண்ணிடமிருந்து பணத்தை கடனாக பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த நபர் முகநூல் பக்கத்தின் ஊடாக குறித்த நபர் நட்புறவானதாக தெரிவிக்கப்படுகிறது.நாள்தோறும் தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த குறித்த நபர் தம்மை ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட பெண்தெரிவிக்கின்றார்.

மேலும் இணைய வழியில் அறிமுகமாகி காதலிப்பதாக கூறி இவ்வாறான மோசடிகளினால் ஆண்டுதோறும் பலர் பாதிக்கப்படுவதாகவும், பெருந்தொகை பணத்தை இழப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2022 ஆம் ஆண்டில் இவ்வாறான மோசடிகளின் ஊடாக 59 மில்லியன் டாலர் பணம் இழக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 13.8 மில்லியன் டாலர் பணம் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இணைய வழியில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இவ்வாறு பெண்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் போதியளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *