நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று(08.06.2023) நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க முற்பட்டதை அடுத்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் டிரான் அலஸ் கூறுகையில்,கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக முதல் நாளே நான் அறிக்கையொன்றை பெற்றேன்.
அறிக்கையொன்றை பெற்றது மாத்திரமல்லாமல், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளையும் எடுத்துப் பார்த்தேன்.
அதனை பார்க்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்று செயற்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது என கூறியுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்குவாதத்தை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,
Be First to Comment