இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதற்கமைய கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நூற்று எழுபத்தைந்து வீதத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30,207 ஆகவும், இந்த ஆண்டு மே மாதத்தில் வந்தவர்களின் எண்ணிக்கை 83,309 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது 175.8 சதவீத பயணிகள் வருகைத் தந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன
Be First to Comment