கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் Learn Asia நிறுவகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மொத்த வறியவர்களின் எண்ணிக்கை 70 இலட்சமாக இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களில் 81 சதவீதம் பேர் கிராமப்புற மக்கள் என்றும், 2019 முதல், கிராமப்புற வறுமை 15 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், 2019 இல் 6 சதவீதமாக இருந்த நகர்ப்புற வறுமை மூன்று மடங்காக உயர்வடைந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன், பெருந்தோட்ட சமூகத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
Be First to Comment