இந்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி கண்ணீர் மல்க உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த நிலையில் கடந்த வருடம் விடுவிக்கப்பட்ட சாந்தன் இன்னமும் இலங்கைக்கு வர முடியாத சூழ்நிலை நிலவுகின்றது.
இந்நிலையில் 75 வயதில் உள்ள தான், தனது மகனுடன் சிறிது காலமேனும் வாழவேண்டும் என சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Be First to Comment