நுவரெலியாவில் தொடருந்தில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் இன்று(11) உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை கல்கந்த வத்த பகுதியைச் சேர்ந்த, ரதெல்ல தமிழ் வித்தியாலய பாடசாலையின் அதிபரான கதிர்வேல் சுப்பிரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் பாடசாலை கற்றல் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் ரதெல்ல தமிழ் வித்தியாலய பாடசாலையிலும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் முடிவடைந்து, குறித்த அதிபர் தொடருந்து வீதியினூடாக வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Be First to Comment