லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரபிட்டிய ஏரியில் நீராடச் சென்ற மாணவர்கள் குழுவில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதான பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிலாபம் பிரதேசத்தில் அமைந்துள்ள மேலதிக வகுப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட உல்லாசப் பயணச் சுற்றுலா ஒன்றிற்காக சென்ற இவர்கள் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை பார்வையிட்டதன் பின்னர் தொரபிட்டிய ஏரியில் நீராடச் சென்ற போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அனர்த்தம் ஏற்படும் போது சுமார் 10 மாணவர்கள் ஏரியில் நீராடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment