யுவதி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் ரஸ்நாயக்கபுர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிலிருந்து, நிகவெரட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தற்காலிகமாக கடமைகளுக்காக இணைக்கப்பட்டிருந்த சார்ஜன்டே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சார்ஜன்ட், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்படும் யுவதியின் உறவினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யுவதி தமது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது சந்தேகநபரான சார்ஜன்ட் அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
Be First to Comment