Press "Enter" to skip to content

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – அமிர்தகழி பிரதேசத்தில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (14) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீடு ஒன்றின் மேல் கூரையை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தச்சுத்தொழிலாளர்கள் இருவரே சம்பவத்தில் மரணித்துள்ளனர்.

இவர்கள் இருதயபுரத்தைச் சேர்ந்த 36 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *