Press "Enter" to skip to content

யூறியா உரம் வாழ்த்துக்கள் விலை குறைந்தது

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் யூரியா உரப்பொதியின் விலை குறைக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யூரியா உரப்பொதியின் தற்போதைய சந்தை விலை 10 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக காணப்படுகின்றது.

இதற்கமைய 50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப்பொதியின் விலையை 9 ஆயிரம் ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்தது.

இதனிடையே 22 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் யூரியா உரம் கப்பல் மூலம் அண்மையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

குறித்த கப்பலில் இருந்து உரத்தை இறக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *