Press "Enter" to skip to content

ஊர்காவற்துறையைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவா் ஒருவர் உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின், கீழ் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை கண்ட ஏனைய மாணவர்கள் அவாின் கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்த போதும் அவா் ஏற்கனவே உயிாிழந்திருந்ததாக தொிவிக்கப்படுகிறது.

அந்த விடுதியில் ஏறக்குறைய 64 மாணவர்கள் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் வசிக்கும் 23 வயதான மாணவா் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து நீதவான் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *