முல்லைத்தீவு – குருந்தூர்மலைக்கு சொந்தமான அரச காணியை வெளித்தரப்பினருக்கு கொடுக்க தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் ஆய்வாளர் எல்லாவல மேதானந்த தேரருக்கு விளக்கமளித்துள்ளது.
தொல்பொருள் பெறுமதிமிக்க குறித்த காணியில், இந்து மற்றும் பௌத்த சின்னங்கள் உள்ளதாக கருதப்படுகிறது.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில், அண்மையில் தொல்பொருள் திணைக்களத்துக்கும் ஜனாதிபதிக்கும் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றது.
இவ்வாறான பின்னணியில் அரசுக்கு சொந்தமான இந்த காணியை எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் வழங்க இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் விளக்கமளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment