இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ,இலங்கை மத்திய வங்கி தற்போது ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது.
டொலரின் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“டொலர் விகிதம் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மத்திய வங்கி அண்மையில் 03 பில்லியன் டொலர்களை கையகப்படுத்தியுள்ளது. இதனால், டொலர் மதிப்பு தற்போதைய நிலையிலேயே பராமரிக்கப்படுகிறது. இல்லையெனில், டொலர் மதிப்பு மேலும் அதிகரித்திருக்கும்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment