Press "Enter" to skip to content

தொல்பொருட்களை அரசிடமிருந்து காக்க வேண்டும் – உதய கம்மன்பில

முல்லைத்தீவு – குருந்தூர் மலை உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை பிரிவினைவாதிகளிடமிருந்தோ அல்லது தீவிரவாதிகளிடமிருந்தோ அல்ல – தற்போதைய அரசாங்கத்திடம் இருந்துதான் காப்பாற்ற வேண்டியுள்ளது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கின்றன.

முன்னாள் அமைச்சர் சிறில் மத்யூ, யுனெஸ்கோ அமைப்பிற்கு அனுப்பியுள்ள முறையீட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 276 இடங்கள் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

இவை 1983 ஆம் ஆண்டளவில் அடையாளம் காணப்பட்டவை. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்லியல் சின்னங்கள் பிரிவினைவாதிகளாலும் தீவிரவாதிகளாலும் அழிக்கப்படுவது மட்டுமன்றி அரசாங்க அதிகாரிகளும் செயலற்றவர்களாகவும், நீதிமன்றங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கி ஆதரவளிக்கின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணையை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை சபாநாயகரிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளோம் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *