யூடியூப் நிறுவனம் அதிரடியான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதாவது இனிமேல் 500 சந்தாதாரர்கள் இருந்தாலே அவர்களுக்கு monetization என்ற வசதி கிடைக்கும் என யூடியூப் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்றையகாலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அணைவரையும் கவர்ந்த ஒரு தளமாக யூடியூப் காணப்படுகின்றது.
குறிப்பாக யூடியூப் தளத்தின் ஓர் உச்ச வளர்ச்சியின் காலமாக அமைந்தது கொரோனா தொற்று காலப்பகுதியே ஆகும். இவ்வாறானதொரு நிலையில் காணப்படும் யூடியூப் தளத்தில் எளிதாக பணம் சம்பாதிக்கும் முறையை தற்போது யூடியூப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் யூடியூப்-இல் 1000 சந்தாதாரர்கள் (Subscribers) மற்றும் 4000 பார்வை நேரங்கள் இருந்தால் மட்டுமே monetization என்ற பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது.
ஆனால் தற்போது 1000 சந்தாதாரர்கள் என்பதற்கு பதிலாக 500 சந்தாதாரர்கள் இருந்தாலே அவர்களுக்கு monetization என்ற வசதி கிடைக்கும் என யூடியூப் அறிவித்துள்ளது.
யூடியூப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறித்த அறிவிப்பு பதிவிடப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த வசதி தற்போது அமெரிக்கா, பிரிட்டன், தாய்வான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment