அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேச சபையின் சுகாதாரப் பணி ஊழியரை அவரது கடமை நேரத்தில் மிகக் கொடூரமாகக் கண்மூடித்தனமாகத் தாக்கும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சுகாதாரத் தொழில் மேற்பார்வையாளரான முன்னாள் தவிசாளரின் சகோதரனே இவ்வாறு சுகாதாரப் பணி ஊழியரை ஈவிரக்கமிண்றி தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார்.
மாற்றுத் திறனாளி மீது தாக்குதல்
தாக்கப்படும் ஊழியரான சின்ராசா என்பவர் ஒரு மாற்றுத் திறனாளி என கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த காணொளி தொடர்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள சமூக வலைத்தளவாசிகள், முன்னாள் தவிசாளரின் சகோதரன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளனர்.
Be First to Comment