வத்தளையில் இ.பி.கசுன் சம்பத் என்ற 29 வயதுடைய இளைஞன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞன், வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள நிறுவனமொன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில் மாயமாகியுள்ளார்.
உதவி கோரும் பொலிஸார்
இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்குப் பின்னர் திடீரென மாயமானார் என்று வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாயமான இளைஞளை யாராவது கண்டால் உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்கு அல்லது 0766689959, 0772190251 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Be First to Comment