நுவரெலியா – வெதமன் வீதி பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று(16) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விருந்தகம் ஒன்றுக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து, மண்ணில் புதையுண்ட இருவர் குறித்த பகுதி மக்களால் மீட்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காலி – ஹில்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 25 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Be First to Comment