நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெட்ரோல் கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக 95 ஒக்டேன் பெட்ரோல் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படாத காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் 95 ஒக்டேன் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெட்ரோல் கையிருப்புகளை உரிய முறையில் பராமரிக்காமையே இந்த நிலைக்கு காரணம் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
Be First to Comment