Press "Enter" to skip to content

கனடாவில் இலங்கை தமிழ் பெண் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்

கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் பெண்ணின்  கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்டோ  நடுவர் நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் இரண்டு பிள்ளைகளின் தாயாரான தீபா சீவரத்தினம் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் முற்றத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

 

 

 

வழக்கில் திருப்பம்

இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 38 வயதான தீபா சீவரத்தினம் கொலையில் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்டோ நடுவர் நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது.

இந்த வழக்கில் தீபாவின் கணவர் விஜேந்திரன் பாலசுப்ரமணியம் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது.

கனடாவில் இலங்கை தமிழ் பெண் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் | Tamil Woman Shot Dead In Canada Husband

 

இந்த நிலையில், இரண்டு நாட்கள் விசாரணைக்கு பின்னர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் இந்த கொலையை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளமை நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட மூவருக்குமான தண்டனை மிக விரைவில் அறிவிக்கப்படும் என நீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *