Press "Enter" to skip to content

குருந்தி விகாரை ஒரு கோவில் அல்ல – தொல்பொருள் நிபுணர் மேதானந்த தேரர்

முல்லைத்தீவில் உள்ள தமிழர்களால் குருந்தூர் மலை என்று அழைக்கப்படும் குருந்தி விகாரை ஒரு கோவில் என்ற அனைத்துக் கூற்றுகளையும் எல்லாவல மேதானந்த தேரர் நிராகரித்துள்ளார்.

மாறாக அந்த இடம் உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வழிபாட்டிடம் என வலியுறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தொல்பொருள் நிபுணரான மேதானந்த தேரர், குருந்தி விகாரை அமைந்துள்ள இடத்தில் ஒரு காலத்தில் கோவில் இருந்ததாக அண்மைக்காலமாக கூறப்படுகின்ற போதிலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இது 100 சதவீத பௌத்த விகாரை என்பதை அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

இருந்த போதிலும், சிலர், பொய்யான கூற்றுகளுக்கு ஆட்பட்டு அந்தப் பகுதி மக்களிடையே நிலத்தை பகிர்ந்தளிக்க முயல்வது தவறு என்று தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, இது தொடர்பில் அனைவருக்கும் நியாயமான உடன்பாட்டை எட்டுமாறு பிக்கு வலியுறுத்தினார்.

வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரையை பல சர்ச்சைகள் சூழ்ந்துள்ள பின்னணியில் எல்லாவல மேதானந்த தேரரின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *